குன்னுார்: குன்னுாரில், 5 நாட்கள் முகாமிட்ட 3 காட்டு யானைகளை வனத்துறையினர், 4 கி.மீ., பின்தொடர்ந்து வனப்பகுதிக்கு விரட்டினர்.
சமவெளி பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியால், உணவு, தண்ணீரை தேடி, காட்டுயானைகள், குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் முகாமிட்டு வருகின்றன. அதில், குட்டியுடன், 3 காட்டு யானைகள் கடந்த, 5 நாட்களாக ரன்னிமேடு, காட்டேரி, கிளண்டேல், டபுள் ரோடு, நஞ்சப்பா சத்திரம், கன்னிமாரியம்மன் கோவில் அருகே உணவு, தண்ணீருக்காக முகாமிட்டன.
வன குழுவினருடன் குணசேகர், சசிகுமார் ஆகியோர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அதில், நந்தகோபால் பாலம், ரயில்பாதை, மரப்பாலம் வழியாக, 4 கி.மீ., துாரம் யானைகளை பின்தொடர்ந்த வேட்டை தடுப்பு காவலர்களால், குரும்பாடி வனப்பகுதிக்கு விரட்டினர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் இரு இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.