ஊட்டி: 'பிரதமர் மோடி பற்றி அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்., எம்.பி., ராகுல் குற்றவாளி,' என, சூரத் கோர்ட் அறிவித்து, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கண்டித்து, காங்., கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி.,யில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் நித்யசத்யா தலைமையில், மாநில எஸ்.டி., பிரிவு தலைவர் பிரியா, கெம்பைய்யா, ரவிக்குமார் உட்பட, 45 பேர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
குன்னுார் லெவல் கிராசில், நகர செயலாளர் ஆனந்த் குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.