காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகரில், மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் என இரு வகையானஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஓரிக்கை, கலெக்டர் அலுவலகம், சின்ன காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை போன்ற வழித்தடங்களில் இந்த ேஷர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
ஷேர்ர் ஆட்டோக்களில் அடாவடியாக கட்டணம் வசூலிப்பதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. ஆனால், கட்டண விவகாரத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இது ஒருபுறம் இருக்க, காஞ்சிபுரம் நகர சாலைகளில், இஷ்டம் போல் ஷேர்ர் ஆட்டோக்களை அதன் ஓட்டுநர்கள் நிறுத்துவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். காஞ்சிபுரம் டி.கே.நம்பிதெருவில், பச்சையப்பன் பெண்கள் கல்லுாரி செல்லும் வழியிலும், கலெக்டர் அலுவலகம் வாசலிலும், பேருந்து நிலைய வாசலிலும் வழியை மறித்து ஆட்டோக்களை நிறுத்துகின்றனர்.
விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மீது, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.