அனுப்பர்பாளையம்: பெருமாநல்லுாரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வரும் 29ம் தேதி கிராம சாந்தி மற்றும் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழாவில், ஏப்., 2ம் தேதி பொங்கல் வைத்தல், 3ம் தேதி காலை 11:00 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு குண்டம் பூ மிதித்தல், மாலை 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 8ம் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
குண்டம் திருவிழாவில், திருப்பூர், அவிநாசி, குன்னத்துார், நம்பியூர், கோபி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.
பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல பஸ் வசதி மற்றும் கோவில் வளாகத்தில், குடிநீர், மொபைல் டாய்லெட், பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய தடுப்பு அமைத்தல் போன்ற நடவடிக்கையில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, தக்கார் பெரிய மருது பாண்டியன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.