காஞ்சிபுரம் அருகே நேற்று முன்தினம் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் ஒன்பது பேர் இறந்தனர். இதில் காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த கங்காதரன் 50. அவர் மனைவி விஜயா, 39. இருவரும் பரிதாமாக இறந்தனர்.
அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். தற்போது தாய், தந்தையை இழந்து தவிக்கும் சிறுமியரின் எதிர்காலம் நிலைமை அப்பகுதி மக்களிடம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆபத்து என தெரிந்தும் பட்டாசு தயாரிப்பு தொழில் செய்வதற்கு அவர்களின் வறுமைதான் காரணம். தினசரி கூலி வேலை செய்தால்தான் அன்றாடும் வாழ்க்கை நடத்த முடியும் என் நிலையில் இருந்தவர்கள் நேற்று முன்தினம் நடந்த வெடி விபத்தில் சிக்கி உடல் கருகி பலியாகினர்.
இந்த விபத்து காஞ்சிபுரம் சுற்று பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த கங்காதரன் அவரது மனைவி விஜயா பட்டாசு தயாரிப்பு வேலைக்கு சென்றவர்கள் பலியாகினர். அவர்கள் மூத்த மகள் சங்கவி 14. காஞ்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் ரூபினி, 12. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
பெற்றோர் இறந்த சோகத்தில் அக்கா - தங்கை இருவரும் ஆழ்ந்த சோகத்தில் காணப்பட்டனர். அவர்கள் எதிர்கால படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெடி விபத்தில் இறந்த கங்காதரன், விஜயா ஆகியோர் உடல் அடையாளம் தெரியாத நிலையில் உடல் துண்டு துண்டாக இருந்தது. நேற்று மதியம் அவர்கள்தான் என உறுதி செய்யப்பட்டு உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் நரேந்திரன் கைது செய்யப்பட்டார்.
மற்றும் பட்டாசு தொழிற்சாலை மேலாளர் மணிகண்டன் 32. என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் வெடி விபத்தில் காயம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.