அஸ்தினாபுரம், :தாம்பரம் மாநகராட்சி அஸ்தினாபுரத்தில், எரிவாயு தகன மேடை உள்ளது. அஸ்தினாபுரம், செம்பாக்கம், மாடம்பாக்கம், நன்மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, சடலங்களை இங்கு எடுத்து வந்து, எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது.
இங்கிருந்து புகை வெளியேறுவதற்காக, 150 அடி உயரம் உடைய குழாய் பொருத்தப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு முன், பலமான காற்று அடித்தபோது, 50 அடியில் உடைந்து விட்டது. தற்போது, 100 அடி உயரம் அளவிற்கு மட்டுமே குழாய் உள்ளது.
இதனால், சடலங்களை தகனம் செய்யும் போது, கீழ் காற்று அடிக்கும் நேரத்தில், அருகேயுள்ள குடியிருப்புகளில் புகை சூழ்ந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.
இப்பிரச்னை குறித்து புகார் தெரிவித்தும் குழாயை மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
இதை கவனத்தில் கொண்டு, புகை குழாயை மாற்ற, மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.