சென்னை, நங்கநல்லுாரில் 32 அடி உயர அதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில், ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
இத்தலத்தில் ராம நவமி விழா லட்சார்ச்சனை, பூர்வாங்க பூஜைகளுடன் நேற்று துவங்கியது. கோதண்டராம சுவாமிக்கு, நாளை, சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது.
தொடர்ந்து லட்சார்ச்சனையும், சிறப்பு யாகமும் துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.
வரும், 26ல் காலை 6:30 மணிக்கு கோதண்டராமருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
காலை, 9:30 மணிக்கு சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ராம நவமி தினமான, 30ம் தேதி காலை 7:30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூர்த்தி, சிறப்பு திருமஞ்சனம் நடக்க உள்ளது.
இக்கோவிலில், ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத் தேர் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிதியாக காசோலை, தங்கம், நன்கொடை செய்ய விரும்புவோர், கோவில் அலுவலகம் அல்லது https://tn.gov.in// என்ற இணையதள முகவரிக்கு வழங்கி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.