குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், வாகன நிறுத்தமாக மாறிவிட்டது.
சானடோரியம் சித்த மருத்துவமனை நுழைவாயிலில் இருந்து குரோம்பேட்டை வரை, ஜி.எஸ்.டி., சாலையில் தனியார் பேருந்து, வேன், கார், லோடு ஆட்டோ என, வரிசையாக வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளனர்.
அதேபோல், சாலையின் கிழக்கு பகுதியிலும் கடைகாரர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, மழை நீர் கால்வாயை முழுமையாக ஆக்கிரமித்து, கடை, வாகன நிறுத்தமாகவே மாற்றிவிட்டனர்.
இதை தடுக்க வேண்டிய, நெடுஞ்சாலைத் துறை, அந்த பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை.போக்குவரத்து போலீசாரும், ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்வதில்லை.
இதனால், 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இப்பிரச்னையில், போக்குவரத்து துணை கமிஷனர் தலையிட்டு, ஜி.எஸ்.டி., சாலையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.