கோவை: ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நிகழ்ச்சியில் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை தத்ரூபமாக செயல்படுத்தி காட்டப்பட்டது.
விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை, கோவை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. இந்திய விமான நிலைய ஆணையம், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு துறை, தேசிய பாதுகாப்பு படை, வெடிகுண்டு கண்டுபிடிப்பு தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், 213 பேர் ஒத்திகையில் பங்கேற்றனர்.
இதில், விமானக்கடத்தலின்போது பாதுகாப்பு படையினர் செயல்படும் விதம் குறித்து தத்ரூபமாக செயல்படுத்திக் காட்டப்பட்டது.கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார்.
கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு துணை இயக்குனர் வினுசச்சின்தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.