திருச்சி:பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே, அண்ணாநகர் பகுதியில், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் சிலர், போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்றுள்ளனர்.
அண்ணாநகர் பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு போதை மாத்திரை, ஊசிகள் விற்றுக் கொண்டிருந்த இருவரை பிடித்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பியோடி விட்டார்.
அவர்களிடம் விசாரித்த போது, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், 22, ரமேஷ், 36, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய முத்துமணி, 26, என்பவரை தேடி வருகின்றனர்.