சேலம்:ஓடும் பஸ்சில் நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள் இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி ரேபாகா, 34. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு திருச்சியில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ்சில் பயணித்தார்.
அந்த பஸ்சில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே பூலாஞ்சேரியைச் சேர்ந்த, அரசு பஸ் டிரைவர் சசிகுமார், 37, என்பவரும் பயணம் செய்தார்.
அப்போது, சசிகுமார் சில்மிஷம் செய்ததாக, நாமக்கல் டவுன் போலீசாருக்கு ரேபாகா தகவல் கொடுத்தார். நாமக்கல் போலீசார், சேலம் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சேலம், புது பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் வந்த நிலையில், சசிகுமாரை போலீசார் பிடித்தனர்.
தொடர்ந்து ரேபாகா அளித்த புகார்படி சசிகுமார், அவருடன் வந்த 38 வயதுடைய மற்றொரு அரசு பஸ் டிரைவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.