காங்கேயம்:காங்கேயத்தில் ேஹாட்டலை சூறையாடிய, கூலிப்படை கும்பலில், மேலும் ஐந்து பேர், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 24.
இவர், அ.தி.மு.க., கவுன்சிலர் சுதாவின் கணவர் ஈஸ்வரமூர்த்திக்குச் சொந்தமான நிலத்தை வாடகைக்கு பேசி ேஹாட்டல் நடத்தி வருகிறார்.
அதை காலி செய்யும்படி கவுன்சிலர் சுதா, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர், பெரியசாமியை மிரட்டி வந்தனர். இந்நிலையில், 13ம் தேதி இரவு, லாரி மற்றும் கார்களில் வந்த முகமூடி கும்பல், ேஹாட்டலை சூறையாடியது.
இது குறித்து திருப்பூர் எஸ்.பி.,யிடம், கண்காணிப்பு கேமரா ஆதாரத்துடன், பெரியசாமி புகார் அளித்தார்.
இது தொடர்பாக, கூலிப்படை கும்பலைச் சேர்ந்த, 32 மற்றும் 37, வயதுடைய இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், 24 - 47 வயது வரை உள்ள மேலும் ஐந்து பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.