பணகுடி:நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பெருங்குடி தெருவைச் சேர்ந்தவர் ஷகிலா, 55, தனியார் பள்ளி ஆசிரியை. கணவர் டேனியல் சேகர், வெளி நாட்டில் பணி புரிகிறார். தன் ஒரே மகளுடன் வீட்டில் ஆசிரியை வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை முகமூடி திருடர்கள் இருவர், வீட்டின் பின்புற ஜன்னல் கம்பிகளை அறுத்து, அதன் வழியாக உள்ளே புகுந்தனர்.
வீட்டில் துாங்கி கொண்டிருந்த ஷகிலாவிடம், அரிவாளை காட்டி மிரட்டி அவரது கழுத்து மற்றும் கைகளில் அணிந்திருந்த, 32 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.
இதுகுறித்து பணகுடி போலீசில் ஷகிலா புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் முன் இருந்த 'சி.சி.டி.வி.,' கேமராக்களை பின் புறமாக திருப்பி வைத்திருந்தனர்; கோழி ரத்தத்தை ஆங்காங்கே தெளித்துச் சென்றிருப்பதும் தெரிந்தது.