உடன்குடி:உடன்குடியில், விஷம் குடித்த துாய்மைப் பணியாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
உடன்குடி டவுன் பஞ்.,சில், துாய்மைப் பணியாளராக பணியாற்றியவர் சுடலைமாடன், 55. இவரை ஜாதியை சொல்லி டவுன் பஞ்., முன்னாள் தலைவி ஆயிஷா திட்டியதாக கூறி, 17ம் தேதி விஷம் குடித்தார்.
ஆபத்தான நிலையில் துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று இறந்தார்.
இதனால், உடன்குடி டவுன் பஞ்., முன் ஏராளமான துாய்மை பணியாளர்கள், கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குவிந்தனர்.
பதற்றமான சூழ்நிலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தபட்ட முன்னாள் பஞ்., தலைவி ஆயிஷா, செயல் அலுவலர் பாபு ஆகியோரை கைது செய்ய, சுடலைமாடன் குடும்பத்துக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்க உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர் போராட்டம் நடத்தினர்.
போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.