கடலுார் : கடலுாரில், பகத்சிங் நினைவு தினத்தையொட்டி, ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது.
கடலுார், தாசில்தார் அலுவலகம் அருகில் இருந்த துவங்கிய ஊர்வலம், தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சின்னத்தம்பி, மாணவர் சங்க மாவட்ட தலைவர் சிவானந்த் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் வினோத்குமார் வரவேற்றார்.
மாநிலத் தலைவர் அரவிந்தசாமி, மத்திய குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் குமரவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் நன்றி கூறினார்.