குள்ளஞ்சாவடி : ஹான்ஸ் விற்ற பெட்டி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர்.
கடைவீதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பாக்கெட்டுகள் விற்கப்பட்டது தெரிய வந்தது.
அதன் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து, ஏ.வி.ஆர்., நகரை சேர்ந்த வைத்தியநாதன், 45; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.