மந்தாரக்குப்பம் : கடலுார் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் சாலைகளில் புழுதி பறப்பதால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.
மந்தாரக்குப்பம் கடை வீதி வழியாக தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகள் நிலக்கரி, சாம்பல் ஏற்றி கொண்டு செல்கின்றன.
இவ்வழியாக லாரிகள் அதிவேகமாக செல்வதால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் லாரிகள் அதிகவேகமாக செல்லும் போது சாலைகளில் புழுதி பறந்து சாலையோர கடைகளுக்குள் செல்கிறது. இதனால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.