விருத்தாசலம் : ராகுலுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து விருத்தாசலத்தில் காங்., கட்சியினர் ரயில் மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமரை அவதுாறாக பேசிய வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில், காங்., கட்சியினர் பகல் 1:50 மணிக்கு, விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் வந்த மும்பை - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.