கடலுார் : கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்வு கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது
திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்வு கூட்டம் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 12 மாவட்டங்களில் வரும் 27ம் தேதி காலை 9:00 மணி முதல், 1:00 மணி வரையும், 2:00 மணி முதல், மாலை 5:45 மணி வரையும் நடக்கிறது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் சரஸ்வதி பங்கஜம் ஓட்டலிலும், கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம் விருத்தாம்பிகை தொழிற்பயிற்சி நிலையத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலுார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும் நடக்கிறது.
குறைதீர்வு கூட்டத்தில், அனைத்து உறுப்பினர், ஓய்வூதியம் பெறுவோர் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.