திட்டக்குடி : திட்டக்குடியில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். மூவர் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி, வதிஷ்டபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன்கள் செல்வகுமார்,34; ராஜ்குமார்,32. இருவரும் நேற்று முன்தினம் இரவு திட்டக்குடியில் இருந்து வதிஷ்டபுரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சுசூகி பைக்கில் சென்றனர். அப்போது பெரம்பலுார் மாவட்டம், வசிஷ்டபுரத்தைச் சேர்ந்த ராஜதுரை,24, கீழப்பெரம்பலுார மணிகண்டன்,23, ஆகியோர் பல்சர் பைக்கில், திட்டக்குடி நோக்கி வந்தனர்.
மணிகண்டன் பைக்கை ஓட்டி வந்த நிலையில், வதிஷ்டபுரம் ரேஷன் கடை அருகே இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் நால்வரும் படுகாயமடைந்து, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
நேற்று மதியம் 2:30 மணிக்கு மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த மணிகண்டன், சில மாதங்களுக்கு முன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். விபத்தில் அவர் இறந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.