விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த மகள் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் குமரன், 43; இவரது மகள் கயல்விழி, 17; இவர், திருக்கனுாரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
பொதுத்தேர்வில் 3 தேர்வுகளை எழுதிய நிலையில் நேற்று தேர்வு இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார். மற்ற தேர்வுக்கு ஏன் படிக்கவில்லை என கயல்விழியை அவரது தாய் சரளா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கயல்விழி நேற்று பிற்பகல் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.
விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.