கோவையில் இருந்து புதன் தவிர, மற்ற நாட்களில் தினமும் காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, மதியம், 12:10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்
சென்னையில் இருந்து மதியம், 2:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கோவை செல்லும். மொத்தம் உள்ள, 495 கி.மீ., துாரத்தை, 6:10 மணி நேரத்தில் செல்கிறது.
திருப்பூர், ஈரோடு, சேலத்தில் மட்டுமே நின்று செல்லும். அதிகபட்சமாக மணிக்கு, 80.31 கி.மீ., வேகத்தில் செல்லும். தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் - கோவை இடையே, புதிய வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம், கால அட்டவணை உள்ளிட்ட விபரங்களை விரைவில் அறிவிப்போம். இந்த ரயில் சேவை துவங்கும்போதும், சென்ட்ரல் - கோவைக்கு ஆறு மணி நேரத்தில் செல்ல முடியும்.
இந்த தடத்தில் ஏற்கனவே செல்லும் மற்ற ரயில்களை ஒப்பிடுகையில், ஒரு மணிநேரம் பயண நேர குறையும். ஆரம்பத்தில் மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும். படிப்படியாக வேகம் அதிகரிக்கும்போது, பயண நேரத்தையும், மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கோவை விரைவு ரயில் - 7:55 மணி நேரம்சேரன் விரைவு ரயில் - 8:00 மணி நேரம்நீலகிரி விரைவு ரயில் - 8.05 மணி நேரம்கோவை இன்டர்சிட்டி - 7:45 மணி நேரம்கோவை சதாப்தி - 7.05 மணி நேரம்