வேளச்சேரி, வேளச்சேரி, தேவி கருமாரியம்மன் நகர், பிரதான சாலையில் ஒரு கடையில் பணம் வைத்து சூதாடுவதாக, போலீசாருக்கு புகார் வந்தது. அந்த பகுதியை கண்காணித்து வந்தனர்.
நேற்று முன்தினம், அந்த கடையில் பணம் வைத்து சூதாடிய வேளச்சேரியைச் சேர்ந்த அன்பு, 50, சுதாகர், 33, உள்ளிட்ட, 11 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, 2,500 ரூபாய், எட்டு சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேளச்சேரி போலீசார், அவர்களை கைது செய்து, சட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர்.