சென்னை,சென்னையில், மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, 'டி.எம்.சவுந்தரராஜன் சாலை' என பெயர் சூட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் பெயர்ப் பலகை திறக்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு, 'டி.எம்.சவுந்தரராஜன் சாலை' என புதிய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இதற்கான பெயர் பலகையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலர் இறையன்பு, செய்தி துறை இயக்குனர் மோகன், டி.எம்.சவுந்தரராஜனின் மகன்கள் பால்ராஜ், செல்வகுமார், மகள் மல்லிகா உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.