சென்னை, இந்திய கடலோர காவல் படை சார்பில், கடல் பரப்பில் எண்ணெய் கசிவு ஏற்படுவதை தடுப்பது குறித்த, முன்னெச்சரிக்கை கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
கடல் பரப்பில் எண்ணெய் கசிவு ஏற்படாமல் தடுத்தல்; எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கடல் பரப்பை துாய்மை படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
எண்ணெய் மற்றும் ரசாயன கசிவு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில், கடல்சார் வாரியம், சென்னை, காமராஜர் துறைமுகங்கள், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.