வடபழனி, எம்.ஜி.ஆர்., நகர், ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 32; அசோக் நகரில், காலணிகள் விற்பனை கடை ஊழியர்.
நேற்று முன்தினம் பணி முடிந்து, அதே பகுதி ஆர்.கே.சண்முகம் சாலையில் சைக்கிளில் சென்றார்.
அங்கு வந்த ஒருவர், தன் மொபைல் போனில் 'சார்ஜ்' தீர்ந்து விட்டதாக கூறி, கார்த்திக்கின் போனை வாங்கினார். யாரிடமோ பேசுவது போல் நடித்து, போனுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அதேபோல, வட மாநில வாலிபர் சுதர்சன், 29, என்பவரிடமும், மொபைல் போன் பறிக்கப்பட்டது. வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.