பெரம்பூர், புளியந்தோப்பைச் சேர்ந்தவர் வெள்ளைசாமி, 67. நேற்று முன்தினம் இரவு, முரசொலி மாறன் பூங்கா அருகே, குளக்கரை சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, ரயில்வே தளவாடங்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி, சம்பவ இடத்திலே பலியானார்.
இது குறித்து விசாரித்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் அரசு, 55, என்பவரை கைது செய்தனர்.