நாகர்கோவில்:இரணியலில் கழிப்பறையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரைச் சேர்ந்தவர் ராஜன், 55. லாரி டிரைவரான இவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குளச்சலைச் சேர்ந்த அருள்பாபி என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இவரை, விசாரணைக்காக நேற்று இரணியல் நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி சென்றவர், அங்கு கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை தடுக்க சென்ற போலீஸ் சுந்தருக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ராஜன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரணியல் போலீசார் விசாரிக்கின்றனர்.