நாகர்கோவில்:கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததை கண்டித்து, பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க., நிர்வாகி தர்ணாவில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் தி.மு.க., வசம் உள்ளது; தலைவராக ஸ்டீபன் உள்ளார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க., விவசாய அணி துணை அமைப்பாளர் ராம்சிங் என்பவர், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால், நடவடிக்கை எடுக்காததால் பேரூராட்சி அலுவலகத்தின் முன்புறம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
'அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் தர்ணா நடத்தினேன்' என ராம்சிங் தெரிவித்தார்.