நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கடையல் அருகே பிலாங்காலை விளையை சேர்ந்தவர் விஜயன் 48. மனைவி சரோஜா 44. ஒரு மகன், மகள் உள்ளனர்.
நேற்று காலை 10:45 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இத்தம்பதியர் திடீர் என தர்ணாவில் ஈடுபட்டனர்.
விஜயன் ஒரு போர்டுடன் தரையில் படுத்தார். போலீசார் விசாரித்த போது 'தங்கள் சொத்தை அபகரிக்கும் வகையில் சிலர் வீட்டை அடித்து நொறுக்கி பொருட்களை சூறையாடி சென்று விட்டதாகவும், களியல் போலீஸ் மற்றும் எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றும் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை நேசமணிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.