கூடலுார்;முதுமலை மாயார் ஆற்றில், அரிய வகை நீர் நாய்களை பார்த்து சுற்றுலா பயணியர் வியப்படைந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பாண்டியார் - புன்னம்புழா, முதுமலை மாயார் ஆறுகளில் சில குறிப்பிட்ட இடங்களை நீர் நாய்கள் வாழ்விடமாக கொண்டுள்ளன. இதனால், அவை தென்படுவது அரிதாக உள்ளது.
தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால், மாயார் ஆற்றின் சில இடங்களில், நீர் நாய்கள் கரைகளில் உலா வருகின்றன. அதில், அபயாரண்யம் அருகே, ஆற்றின் கரையில் நேற்று உலா வந்த இரண்டு நீர் நாய்களை கண்ட சுற்றுலா பயணியர் வியப்படைந்தனர்.
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில்,'அழிவின் பட்டியலில் உள்ள நீர்நாய்களை காண்பது அரிது. அவை உலா வரும் போது சுற்றுலா பயணியர் சப்தமிட கூடாது. இதை பாதுகாப்பது அவசியம்' என்றனர்.