மேட்டுப்பாளையம்;செல்போன் கேட்டு தாய் கொடுக்காததால் மனம் உடைந்த, 9 ம் வகுப்பு படிக்கும் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை, பழைய சந்தை கடையை சேர்ந்தவர் ஐசக் ஜெயராஜ். இவரது மனைவி எஸ்தர். இவர்களுக்கு ஒரு மகள், மகன். மகள் குளோரி வசீகரம்,14; அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். மகள் அடிக்கடி மொபைல்போன் பார்த்துக் கொண்டிருப்பதை, இவரது தாய் எஸ்தர் கண்டித்துள்ளார்.
நேற்று காலை தாயிடம் மொபைல் போனை தரும்படி, மகள் கேட்டுள்ளார். இவரது தாய், மகளைத் திட்டி விட்டு, பெரியநாயக்கன்பாளையம் சென்று விட்டார். வந்து பார்த்தபோது, வீட்டில் பேனில் குளோரி வசீகரம் தூக்கில் தொங்கினார். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர் கூறினார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.