உடுமலையில் வடுமாங்காய் 'சீசன்' | திருப்பூர் செய்திகள்| Vadumangai Season in Udumalai | Dinamalar
உடுமலையில் வடுமாங்காய் 'சீசன்'
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
Vadumangai Season in Udumalai   உடுமலையில் வடுமாங்காய் 'சீசன்'

உடுமலை:உடுமலை வனப்பகுதிகளில் வடுமாங்காய் வரத்து துவங்கி உள்ளதால், மலைவாழ் மக்கள் அவற்றை சேகரித்து, விற்பனை செய்கின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள், வனத்திலுள்ள சிறு பொருட்களை சேகரித்து, நகரப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

தற்போது, வடுமாங்காய் எனப்படும் சிறிய அளவிலான மாங்காய்கள் வரத்து துவங்கி உள்ளது. அவற்றை சேகரித்து வந்து, கிலோ, 150 ரூபாய்க்கு மலையடிவார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

வனத்துறையினர் கூறியதாவது: இயற்கையாகவே, இம்மரங்கள், 70 மீ., வரை மிக உயரமாக வளரும். மார்ச் முதல் மே வரை, சிறிய அளவிலான வடுமாங்காய்கள் காய்க்கும்.

குரங்கு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள் விரும்பி உண்ணும். ஊறுகாய் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்கு வடுமாங்காய் அதிகம் பயன்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X