மல்லசமுத்திரம்,- -புளியமரத்தின் மீது டூவீலர் மோதிய விபத்தில் எலக்ட்ரீஷியன்
பலியானார்.மல்லசமுத்திரம் அடுத்த இருகாலுார் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மோகன், 40; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணியளவில், 'ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, மல்லசமுத்திரத்தில் எதிரே வாகனம் வந்ததால் செல்லவழியின்றி, வாகனத்தை திருப்பி உள்ளார். இதில் வாகனம் சாலையோரத்திலிருந்த புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில், மோகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அருகிலிருந்தவர்கள் மோகனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே, மாலை, 6:00 மணிக்கு உயிரிழந்தார். இவருக்கு, ஜோதி, 32, என்ற மனைவியும், அஸ்விதா, 12, நிஷ்விதா, 7, என்ற இரு மகள்களும் உள்ளனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.