சேந்தமங்கலம்,-சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி அருகே, உத்திரகிடிகாவல் பஞ்., வெட்டுக்காடு, நாச்சிபுதுார் கிராமத்தில், மஹா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இதில், கணபதி, நவகிரகம், செல்வ விநாயகர், மஹா மாரியம்மன், சன்னாசி முனிவர் அடங்கிய சிலைகள் அமைந்துள்ளன. புதிதாக ஆலயம் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வரும், 27ல் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை காலை, 6:00 மணிக்கு கணபதிக்கு பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, லட்சுமி, சரஸ்வதி, திரவியங்கள் ஹோமம், தீபாராதனை நடக்கிறது.காலை, 9:00 மணிக்கு மங்கள இசையுடன் புனிதநீர், முளைப்பாரி எடுத்துவரப்பட்டு தீபாராதனை நடக்கிறது. 27 காலை, 7:20 மணிக்கு கணபதி, நவகிரகம், செல்வ விநாயகர், மஹா மாரியம்மன், சன்னாசி முனிவர் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.