கரூர்,-கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில், கரூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், துாய்மை பணியை தனியாரிடம் விடும், ஒப்பந்த நடவடிக்கையை கைவிட வேண்டும், துாய்மை பணியை மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும், துாய்மை பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு., நிர்வாகிகள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.