குளித்தலை-கடவூர் அருகே, சுக்காம்பட்டி நடுக்களம் கிராமத்தை சேர்ந்த நுாறுநாள் வேலை திட்ட தொழிலாளர்கள், சம்பள பணம் வழங்காததை கண்டித்து, பாலவிடுதி - கடவூர் நெடுஞ்சாலையில் சுக்காம்பட்டி பிரிவு சாலையில், நேற்று முன்தினம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாலவிடுதி போலீசார் எச்சரிக்கை விடுத்தும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் 2 மணி நேரம் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில் அரசு அனுமதியில்லாமல் சாலை மறியலில் ஈடுபட்ட, சுக்காம்பட்டி நடுக்களம் கிராமத்தை சேர்ந்த பார்வதி, 55, மகாலட்சுமி, 40, முத்துலட்சுமி, 36, சண்முகவள்ளி, பழனியம்மாள், பாலாமணி, பாக்கியலட்சுமி, கண்ணம்மா ஆகிய 8 பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.