மாரியம்மன் கோவிலில்
காங்., ஆர்ப்பாட்டம்கோபி,-காங்., எம்.பி., ராகுலுக்கு, அவதுாறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, கோபி சட்டசபை தொகுதி காங்., கட்சி சார்பில், கோபியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லசாமி, நகர தலைவர் மாரிமுத்து, வட்டார தலைவர்கள் சண்முகசுந்தரம், ஜவகர்பாபு, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செல்வமுத்து மாரியம்மன்கோவிலில் 29ல் பொங்கல்ஈரோடு,-பெரிய சேமூரை அடுத்த, தென்றல் நகர் செல்வமுத்து மாரியம்மன், விநாயகர், பாலமுருகன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா வரும், 29ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 28ம் தேதி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. 29ம் தேதி அக்னி கரகம், அலகு குத்துதல், பொங்கல் வைபவம் நடக்கிறது.கொடுமுடி காவிரி கரையில் ஆக்கிரமிப்பு: போலீசில் புகார்கொடுமுடி, மார்ச் 25-காவிரி கரையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, போலீசில் புகார் தரப்பட்டது.கரூர் நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவு பாசன ஆய்வாளர், கொடுமுடி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில், பலர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கடை அமைத்திருந்தனர். சில மாதங்களுக்கு முன் நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவினர், வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர். மீண்டும் அதே பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அகற்ற சொன்னால் மறுக்கின்றனர். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊனமுற்றோர் தின விழாகோபி,-அறம்-நேசம் தன்னார்வ இயக்கத்தின் சார்பில், உலக ஊனமுற்றோர் தினத்தின் பத்தாம் ஆண்டு துவக்க விழா கோபியில் நடந்தது. விழாவில் பயனாளிகளுக்கு, கல்வி உதவித்தொகை, சிறுதொழில் உதவி, ஊன்றுகோல் மற்றும் சர்க்கர நாற்காலி வழங்கினர். உஷாராணி, சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.