ஈரோடு-நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.இதுபற்றி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் தற்போது வரை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில், 35,862 தொழிலாளர்கள், உடல் உழைப்பு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில், 64,088 தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில், 5,505 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில், பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்களது குழந்தைகளின் கல்விக்கான நலத்திட்ட உதவிகளை மே, 31க்குள் www.tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பயன் பெறலாம்.ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு ஐ.டி.ஐ., பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாக கீழ் தளத்தில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் அல்லது, அலுவலக தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.