கொடுமுடி-சனி பெயர்ச்சியை முன்னிட்டு, கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவிலில், சிறப்பு வழிபாடு தொடங்குகிறது.நாளை முதல் 28ம் தேதி வரை காலை வரை, சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம், 108 கலச அபிஷேகம் நடக்கிறது. ௨௮ம் தேதி மாலை லட்சார்ச்சனை தொடங்குகிறது. 29ம் தேதி காலை சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம், 108 கலச அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை தொடர்ச்சி நடக்கிறது. மதியம் மகா தீபாராதனை நடக்கிறது. இதில் ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீன ராசியினர், பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். சனி பெயர்ச்சி சிறப்பு லட்சார்ச்சனை சீட்டு கட்டணம், 100 ரூபாய். கோவில் அலுவலகத்தில் செலுத்தி, கலந்து கொள்ளலாம் என்று, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.