புதுச்சேரி : புதுச்சேரியில் குடிநீர் தரமாக இல்லையென தணிக்கை அறிக்கை வெளியாகியுள்ள சூழ்நிலையில் நேற்று சட்டசபையில் கேள்வி நேரத்திலும் எம்.எல்.ஏ.,க்கள்குடிநீர் விநியோகம் தொடர்பாக சராமரியாக கேள்வி எழுப்பினர்.
ஜான்குமார்: குடிநீருக்கு தனியாகவும், வீட்டு உபயோகத்திற்கு தனி குழாயும் அமைக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளதா...
அமைச்சர் லட்சுமி நாராயணன்: தேவைப்படின் பரிசீலிக்கப்படும்.
ஜான்குமார்: மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. நாளை மின்தடை என செய்தி வந்தால், முதல் நாளே தண்ணீரை பிடித்து நிரப்பி வைக்கின்றனர். அடுத்த நாள் மின்சாரம் வந்ததும், அந்த நீரை கீழே ஊற்றி வேறு தண்ணீர் பிடித்து, வீண் செய்கின்றனர்.
அமைச்சர்: புதுச்சேரியில் 119 மில்லியன் லிட்டர் தண்ணீர் தருகிறோம். பிற மாநிலங்களைவிட 60 சதவீதம் அதிகம். ஒரு நபருக்கு 135 லிட்டர் தண் ணீர் தருகின்றோம். அதுபோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 30 எம்.எல்.டி நீர் வீணாகிறது. 5 முதல் 7 எம்.எல்.டி நீர் மட்டும் தொழிற்சாலைகள், எம்.எல்.ஏ.,க்கள் அரசு நிர்ண யித்துள்ள தொகைக்கு பெற்றுச் செல்கின்றனர். எதிர்காலத்தில் தரமான குடிநீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செந்தில்குமார்: குடிநீர் தரம் குறித்து தணிக்கை அறிக்கையின் மதிப்பீடு குறித்து 'தினமலர் நாளிதழில்' செய்தி வெளியாகி உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் திட்டம் உருவாக்க வேண்டும்.
அமைச்சர்: புதுச்சேரியில் குடிநீரைப்பற்றி முழுமையாக 40 பக்கத்தில் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முழுமையான விபரங்களை கேட்டுள்ளேன்.
கல்யாணசுந்தரம்: குடிநீர் சுத்திகரிப்பு நிலையங் களில் சரியாக பராமரிப்பது இல்லை. அதனையும் கவனிக்க வேண்டும்.
அமைச்சர்: குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரித்து வரும் தற்போதைய நிறுவனத்துடனான ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. புதியதாக ஒப்பந்தம் போடப்பட உள்ளது.
நேரு: நகரப்பகுதியில் குடிநீர் மாசு அடைந்துள்ளது. பருக உகந்ததாக இல்லை. தென்பெண்ணை ஆற்று பகுதி யில் இருந்து போர்வெல் அமைத்து குழாய் வழியாக நகரப்பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் ஏ.எப்.டி., என்ற பிரெஞ்சு அரசின் நிதி திட் டம் எந்த நிலையில் உள்ளது.
அமைச்சர்: ஏ.எப்.டி., திட்டத்தின் முதல்கட்டமாக 40 ஆழ்துளை கிணறு கள் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற் போது வல்லுநர் குழு அமர்த்தப்பட்டு கடந்த டிசம்பர் முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்குழு குடிநீருக்கான மொத்த விரிவான திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இத்திட்டத்தின் குழாய் பதிக்கும் பணி துவக்கப்படும்.
நேரு: குடிநீரில் 250க்கு கீழ் இருக்க வேண்டிய டி.டி.எஸ்., அளவு 3000த்தை தாண்டியுள்ளது. ஒரு குழுவை நியமித்து கிராம மக்களிடம் பேசி நகர பகுதிக்கு குடிநீரை கொண்டுவர வேண்டும்.
முதல்வர்: ஆழ்துளை கிணறு அமைத்தால், நிலத்தடி நீர் குறைந்துவிடும் என விவசாயிகள் அச்சப்படுகின்றனர். கிராமங்களில் ஆழ்குழாய் புதைப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என்பதை அவர்களிடம் தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். விவசாயிகள் ஒத்துழைப்புடன் தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும்.
ஊசுட்டேரியில் நகர பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர முயற்சி கொள்ளப்பட்டது. கோர்ட்டி தடை வாங்கியுள்ளதால், திட்டம் தடைப்பட்டுள்ளது.
இன்னும் சில ஏரிகளில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டம் உள்ளது. இதற்காக ரூ. 500 கோடியில் ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் நகர பகுதிக்கு நல்ல குடிநீர் கிடைக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.