கடலுார் : கடலுார் காப்பகத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட வர் பினாயில் குடித்து இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ராஜ மகேந்திரன், 44; ஆதரவற்ற நிலையில் இருந்த அவர், மன நிலை பாதிக்கப்பட்டு கடலுார், வண்ணாரப்பாளையத்தில் இயங்கி வரும் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தின் மனநல காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 22ம் தேதி கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த பினாயிலை குடித்து மயங்கி விழுந்தார். காப்பக ஊழியர்கள், அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் இறந்தார்.
கடலுார், தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.