புதுச்சேரி: புதுச்சேரி சாந்திகிரி ஆயுர்வேதா மற்றும் சித்தா மருத்துவமனையில் நாளை (26ம் தேதி) மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரம சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவமனையின் புதுச்சேரி கிளை எஸ்.வி.,பட்டேல் சாலை பழைய சாராய ஆலை அருகில் இயங்கி வருகிறது.
இம்மருத்துவமனையில் நாளை (26ம் தேதி) மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் ஆலோசனை முகாமில் கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி, ஆர்த்தரைடிஸ்,ஸ்பான்டிலேசிஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கேரளா பாரம்பரிய முறைப்படி ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கேரளாவின் பிரபல டாக்டர் ஜிபி கோபாலகிருஷ்ணன், மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கண்ணன் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர். அறுவை சிகிச்சை இன்றி நோய்களை குணப்படுத்தலாம். முன் பதிவு அவசியம். முன்பதிவிற்கு 0413-2225898, 95855 35898 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.