புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் பட்டைய படிப்புகளில் சேர்வதற்கு, தேசிய தேர்வு முகமை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நடத்தும் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வு 'கியூட் (பி.ஜி) - 202'-இன் படி, புதுச்சேரி மத்திய பல்கலையில் பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
முதுகலை பட்டப்படிப்பு, பட்டைய படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பத்தளம் கடந்த 20ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் கியூட் (பி.ஜி.,) - 2023-க்கு https://cuet.nta.nic.in என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
https://www.pondiuni.edu.in/admissions -என்னும் பல்கலைக்கழக வலை தளத்தில் தகவல் குறிப்பேட்டினை அறியலாம். விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களை, https://cuet.nta.nic.in என்னும் என்.டி.ஏ., வின் வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.