கள்ளக்குறிச்சி : வி.கூட்ரோடு மேம்பாலத்தில் சரக்கு வாகனம் மோதி பைக்கில் சென்ற பி.டி.ஓ., அலுவலக ஊழியர் இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, பாவக்கல்லை சேர்ந்தவர் வெற்றிசெல்வன்,34; கல்வராயன்மலை பி.டி.ஓ., அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாளராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் டி.வி.எஸ்., ஸ்டார்சிட்டி பைக்கில் தலைவாசலில் இருந்து சின்னசேலம் நோக்கி வெற்றிசெல்வன் சென்றுள்ளார்.
வி.கூட்ரோடு மேம்பாலத்தில் சென்ற போது, எதிர்திசையில் வந்த அசோக் லைலாண்ட் தோஸ்த் என்ற சரக்கு வாகனம் வெற்றிசெல்வன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த வெற்றிசெல்வன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.