சிவகாசி,-சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் கல்லுாரி நிறுவனர், 54 வது கல்லுாரி ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் திலகவதி முன்னிலை வகித்தார். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் பிரீத்தி வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் பேசினார். 2022- - 23 கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி மாணவ பேரவை தலைவி உஷாராணி நன்றி கூறினார்.