ஸ்ரீவில்லிபுத்தூர்--விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் சார்பில், ராகுல் எம்.பி.பதவி நீக்கத்தை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்து பேசினார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பொறுப்பாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். நகர் காங்கிரஸ் தலைவர் வன்னியராஜ் வரவேற்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சக்தி மோகன், மாவட்ட துணை தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் முருகேசன், ராஜபாளையம் நகராட்சி கவுன்சிலர் சங்கர் கணேஷ் மற்றும் வத்திராயிருப்பு, கூமாபட்டி, குன்னூர், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.