ஊட்டி;ஊட்டி பைக்காரா அணை கரையோரத்தில், புலி தண்ணீரில் இறந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் கவுதம், வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். பின், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேசன் தலைமையில், கால்நடை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து அங்கேயே எரியூட்டினர்.
மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''4 வயது மதிக்கத்தக்க பெண் புலி இறந்த நிலையில் தண்ணீரில் கிடந்தது. உடலில் காயங்களோ பிற அறிகுறிகளோ தென்படவில்லை,'' என்றார்.