தஞ்சாவூர்:கும்பகோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழக காங்., தலைவர் அழகிரி உள்ளிட்ட மூவர் மீது, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.
பிரதமர் மோடி குறித்து அவதுாறு கருத்துக்களை பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைக் கண்டித்து சென்னை செல்ல தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த தமிழக காங்., தலைவர் அழகிரி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர், அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ரயில்வே போலீசார், அழகிரி உட்பட மூன்று பேர் மீது, அனுமதியின்றி கூட்டம் திரட்டி, ரயிலை மறித்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.