'ஆன்லைன் ரம்மி' தடை மசோதா தி.மு.க., மீது அர்ஜுன் சம்பத் புகார் | திருநெல்வேலி செய்திகள்| Arjun Sampath complains about DMKs online rummy ban bill | Dinamalar
'ஆன்லைன் ரம்மி' தடை மசோதா தி.மு.க., மீது அர்ஜுன் சம்பத் புகார்
Added : மார் 26, 2023 | |
Advertisement
 
Arjun Sampath complains about DMKs online rummy ban bill   'ஆன்லைன் ரம்மி' தடை மசோதா தி.மு.க., மீது அர்ஜுன் சம்பத் புகார்

திருநெல்வேலி:''ஆன்லைன் ரம்மி பிரச்னையில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது,'' என, நெல்லையில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

திருநெல்வேலியில் அவர் கூறியதாவது:

ஏப்., 1, 2ம் தேதிகளில் துாத்துக்குடியில் சதானந்த ஹிந்து தர்ம எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் கனிமவளக் கொள்கை, தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

எங்கள் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நீதிமன்றத்தை நாடி உள்ளோம். போலீசார், ஸ்டெர்லைட் பிரச்னை இருப்பதால், எங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என, தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். மீண்டும் காங்., கட்சியினர் காமராஜர் ஆட்சியை கொண்டு வர முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.

ஆன்லைன் ரம்மி என்பது சட்டசபையில் மசோதா நிறைவேற்றினாலே அந்த மசோதா ஆறு மாதங்களுக்கு செல்லும். அந்த ஆறு மாதங்களுக்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் ரம்மி தொடர்பாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதை தமிழகத்தில் ரத்து செய்யலாம். ஆனால், அதையெல்லாம் விட்டு கவர்னர் தடை செய்கிறார் என, வீண் பழி சுமத்துவதில் நியாயம் கிடையாது. இதில், முழுக்க இரட்டை வேடம் போடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X